சடலங்களுக்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை தொடர்பில் புதிய சுற்று நிருபம்

உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு  மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை தொடர்பில் சுகாதார அமைச்சு புதிய சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன், குறித்த சுற்று நிருபம் இன்று  வெளியிட்டுள்ளது.

இதன்படி, அனைத்து உயிரிழப்புகளிலும் பிரதே பரிசோதனையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமல்ல என  சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், அவசியம் ஏற்படும் நிலையில், நீதித்துறை வைத்திய அதிகரிகளின் விருப்பத்திற்கமைய PCR பரிசோதனையினை மேற்கொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

 PCR பரிசோதனையினை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் நிலையில், முன்னதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினை பின்பற்றி  செயற்படுமாறும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!