மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல அனுமதியளிக்காததால் வாயை ஊசி நூலால் தைத்துக்கொண்ட புலம்பெயர்வோர்!

தங்களை அமெரிக்கா செல்ல அனுமதிக்கும் வகையில், மெக்சிகோ வழியாக பயணிக்க அனுமதியளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, புலம்பெயர்வோர் சிலர் தங்கள் வாய்களை ஊசி நூலால் தைத்துக்கொண்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்வோர் பலர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக மெக்சிகோ நோக்கி பயணித்துள்ளனர்.
    
குவாதிமாலா அருகில் மெக்சிகோ எல்லைக்குள் நுழைந்த அவர்கள், மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய விரும்புகிறார்கள்.

ஆனால், அமெரிக்கா, மெக்சிகோ வழியாக புலம்பெயர்வோரை அகுமதிக்கக்கூடாது என மெக்சிகோவை அறிவுறுத்தியுள்ளது. ஆகவே, அந்த புலம்பெயர்வோர் எல்லையிலேயே பிடித்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், தங்களை மெக்சிகோ வழியாக அமெரிக்கா அனுப்புமாறு அந்த புலம்பெயர்வோர் மெக்சிகோ அரசை கோரி வருகிறார்கள். தங்கள் கோரிக்கைக்கு மெக்சிகோ அரசு செவிசாய்க்காததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குழந்தையுடன் வந்த ஒரு பெண் உட்பட புலம்பெயர்வோர் சிலர் தங்கள் வாய்களை ஊசி நூலால் தைத்துக்கொண்டார்கள்.

மெக்சிகோவில் அவர்கள் இருக்கும் Tapachula என்ற இடத்துக்கும், அமெரிக்க எல்லைக்கும் இடையில் 1,120 மைல் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!