சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை

சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன், பிளாஸ்டிக்  உள்ளிட்ட சூழலுக்கு தீங்கினை விளைவிக்கும் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு அண்மையில் தீர்மானம் மேற்கொண்டது.

இதற்கமைய, சதொச விற்பனை நிலையங்களில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோருக்கிடையில் அண்மையில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!