ஜெர்மனிக்கு வரவிருக்கும் பேராபத்து!

வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவை புரட்டிப்போட்ட அதிவேக புயல், இன்னும் சில மணிநேரங்களில் ஜேர்மனியை சூறையாட வந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று, மணிக்கு சுமார் 152 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய Ylenia புயல் வடக்கு ஜேர்மனியை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிச் சென்றது. இந்த புயல் காற்றில், லோயர் சாக்சோனி, ப்ரெமென், ஹாம்பர்க், ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன், மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியா, பிராண்டன்பர்க் மற்றும் பெர்லின் ஆகிய கூட்டாட்சி மாநிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
    
இந்த புயலின் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 170-க்கும் மேற்பட்ட நகரங்கள் மின்வெட்டை எதிர்கொண்டன. பள்ளி கல்லூரிகள் உட்பட முக்கிய இடங்கள் மூடப்பட்டன.

Ylenia புயலின் தாக்கத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில், இன்னும் சில மணிநேரங்களில் இன்னொரு அதிவேக புயல் ஜேர்மனியை தாக்கவுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை மணிக்கு சுமார் 200 கிலோமீற்றர் வேகத்தில் பிரித்தானியாவை புரட்டியெடுத்துச் சென்ற Eunice புயல், இன்னும் சில மணிநேரங்களில் Zeynep புயல் என்ற பெயரில் ஜேர்மனியை தாக்கவுள்ளது.

மணிக்கு சுமார் 140 கிலோமீற்றர் வேகத்தில் Zeynep புயல் வடக்கு ஜேர்மனியை தாக்கவுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு கிழக்கே Brandenburg-ஐ நோக்கி நகரும் என்றும் சனிக்கிழமை காலை வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சனிக்கிழமை நாள் முழுவதும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பாக பெர்லின் , பிராண்டன்பர்க், மெக்லென்பர்க்-வோர்போமர்ன் , ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன், ப்ரெமென் , ஹெஸ்ஸி , நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா, துரிங்கியா , ஹாம்பர்க், சாக்சோனி , சாக்சோனி, சாக்சோனி , பிராண்டன்பர்க், மெக்லென்பர்க்-வொர்போமர்ன் மற்றும் சாக்சோனி-அன்ஹால்ட் ஆகியவற்றின் பெரும் பகுதிகள் புயலால் ஜேர்மனியின் வடக்குப் பகுதி மிகவும் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்கும் என DWD சிவப்பு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Zeynep புயலால் சனிக்கிழமை முழுவதும் பொது வாழ்வில் இடையூறுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மூடப்படும், மேலும் புயலின் போது பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது பயணத்தையோ தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!