எரிபொருட்களின் விலை உயரலாம்! பாதிப்பை தடுக்க தயாராகுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை!

ரஷ்ய துருப்புக்கள் யுக்ரேனுக்குள் பிரவேசிப்பது இலங்கைக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வுகூறியுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலையை மேலும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டே ரணில் விக்கிரமசிங்க இந்த எதிர்வை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கைத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள மூன்று கப்பல்களின் எரிபொருளை முன்னைய விலைக்கே கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


எரிபொருட்களின் விலை 115 டொலர்கள் வரை அதிகரிக்கப்படுவதால் இலங்கைக்கு பாதகமான பாதிப்பு ஏற்படும்.

அத்துடன் யுக்ரைனில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து கட்டாரில் இருந்து அதிக ,இயற்கை எரிவாயு பங்குகளை ஐரோப்பா கொள்வனவு செய்வதால், இலங்கைக்கு போதுமான எரிவாயு கையிருப்பு கிடைக்கப் போவதில்லை.

எனவே இந்த நிலைமை குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விளக்கமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!