GST வரி சட்ட மூலம் குறித்து உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

வி சேட பொருள் மற்றும் சேவை வரி சட்டமூலத்தினை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட வேண்டும் என்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டுமென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமைர்வுகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை மற்றும் கையொப்பம்’ இடப்பட்டமை குறித்து சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையிலேயே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

விசேட பொருள் மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானதாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!