வடக்கில் புலிகள் ஆதரவு மனோநிலை – அடக்கும் முயற்சியில் இறங்குகிறது அரசு!

வடக்கில் மீண்டும் தலைதூக்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு மனோநிலையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக, சட்டம்ஒழுங்கு அமைச்சர், ரஞ்சித் மத்தும பண்டாரவும், பொலிஸ்மா அதிபரும் நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார ஜயமக நேற்று இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர், பொலிஸ்மா அதிபருடன் நானும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளேன். சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் மற்றும் மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் ஆதரவு மனோநிலை அதிகரித்துள்ளமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காவே வடக்கிற்கு செல்லவுள்ளோம்.

இந்த விடயத்தில் தொடர்புபட்ட அனைத்து நபர்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இதற்கு தீர்வை காணமுயல்வோம். வடக்கில் உள்ள மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் ஆதரவு மனோநிலை காணப்படுகின்றது அதனை கூடியவிரைவில் மாற்றுவோம். இது சுலபமல்ல ஆனால் நாங்கள் அதனை செய்வோம். விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!