புடினின் நடவடிக்கையால் சீரழிந்து வரும் ரஷ்யா: உண்மையை போட்டுடைத்த நபர்!

ரஷ்யாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை அசுர வேகத்தில் சீரழிந்து வருவதாக அங்கிருக்கும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 24ம் திகதி முதல் உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு வரலாறு காணாதவகையில் சரிந்து வருகிறது.
    
பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை அசுர வேகத்தில் சீரழிந்து வருவதாக அங்கிருக்கும் நபர் ஒருவர் நிலைமை விவரித்துள்ளார்.

பலர் ரஷ்யாவை விட்டு வெளியேறி வருவதாகவும், ஏடிஎம்-களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும்.

பலரின் ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் ரஷ்யா அதன் எல்லைகளை மூட உள்ளதாக வதந்திகள் பரவிவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் யாருமே விரும்பாத உக்ரைன் மீதாக ரஷ்யா போரால், ரஷ்யா குடும்பங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் சீரழிந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!