“இந்திய தூதரகம் எனக்கு உதவவில்லை” – உக்ரைனில் துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவர் தகவல்!

இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனை விட்டு பொதுமக்கள் தப்பி அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். உக்ரைனுக்கு மருத்துவம் பயிலச் சென்ற இந்திய மாணவர்களும் அங்குச் சிக்கியுள்ளனர். அவர்களை இந்திய அரசு `ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மீட்டு வருகிறது.
    
இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஹர்ஜோத் சிங் உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். போரின் தீவிரம் காரணமாக கீவிலிருந்து தப்பி லிவிவ் செல்ல முயன்றபோது அவர் சுடப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த மாணவர் பிரபல தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து தப்பிக்க நண்பனுடன் காரில் புறப்பட்டேன்.

அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டேன். அதனால் என் தோளில் தோட்டா பாய்ந்தது. என் காலிலும் எழும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது நான் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு கொண்டு, என்னால் நடக்க முடியவில்லை…

நான் லிவிவ் நகருக்குச் செல்ல உதவுங்கள் என்று கேட்டேன். ஆனால், யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. அதன் பின்பே கீவ் நகர மருத்துவமனைக்குச் சென்றேன். இங்கு இன்னும் பலர் வீடுகளுக்குள்ளே பயத்தில் முடங்கிக் கிடக்கிறார்கள். இப்போது உலகுக்கு இங்கு என்ன நடக்கிறது எனத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!