ஜனாதிபதியை சந்திப்பது அவசியமற்றது!

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோருக்கு நியாயம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளேன். பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதியை சந்திப்பது அவசியமற்றது என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
    
இடதுசாரி ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிவிதுறு ஹெல உறுயமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என தீர்மானித்ததை இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மத்திய செயற்குழு அங்கிகரித்துள்ளது.

நீர்வழங்கல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மக்களுக்கான சேவையில் இருந்து விலகியிருப்பதற்கு மத்திய செயற்குழு அனுமதி வழங்கவில்லை.

அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு நியாயம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளேன்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட கோரவுமில்லை, அதற்கு அவசியமும் கிடையாது.

11 பங்காளி கட்சிகளில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதான கட்சியல்ல.சுதந்திர கட்சி தான் எங்களுடன் ஒன்றினைந்து செயற்படும் தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்திற்குள் முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளதால் மக்கள் விடுதலை முன்னணியுடனும், ஐக்கிய மக்கள் சக்தியுடனும் கைகோர்க்கமாட்டோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!