அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் வாசுதேவ?

வாசுதேவ நாணயக்கார வகித்து வரும் நீர் வழங்கல் அமைச்சர் பதவியில் வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சின் பணிகளில் இருந்து விலகி இருப்பதன் காரணமாக அமைச்சுக்கு நிர்வாக ரீதியாக சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமை்ச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையடுத்தே அரசாங்கம் இது சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் தான் தொடர்ந்தும் அமைச்சர் பதவியின் கடமையை செய்து வருவதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார். எனினும் அவர் நேற்றைய தினம் தனது உத்தியோகபூர்வ வீடு மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் கையளித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து வந்த விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை ஜனாதிபதி அண்மையில் பதவிகளில் இருந்து நீக்கினார். இவர்களின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் அமைச்சுக்கும், அமைச்சரவையின் கூட்டத்திற்கு செல்ல போவதில்லை என வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.  

இதனிடையே சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற அரசாங்கம் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் முதல் சந்தர்ப்பத்திலேயே தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என நாணயக்கார ஏற்கனவே கூறியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!