உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு திட்டம்!

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்டுள்ள இந்திய மருத்துவ மாணவர்கள், இங்கேயே படிப்பை தொடர்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக, பார்லிமென்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் நேற்று துவங்கியது. கூட்டு எண்ணம்கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களுக்கான எதிர்கால திட்டம் குறித்து, காங்.,கைச் சேர்ந்த கவுரவ் கோகோய் கேள்வி எழுப்பினார்.
    
இதற்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் நேற்று கூறியதாவது:’ஆப்பரேஷன் கங்கா’ என்ற பெயரில், உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த முயற்சி, 130 கோடி இந்தியர்களின் கூட்டு எண்ணம்.இந்த மாணவர்களுக்கு, உக்ரைனுக்கு அருகில் உள்ள நாடுகளில் படிப்பதற்கான ஏற்பாடு செய்யப்படுமா என, இங்கு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

நம் நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்டு, பத்திரமாக அழைத்து வந்துள்ளோம். அவர்களது பாதுகாப்புக்கு மட்டுமல்ல, எதிர்காலத்துக்கும் இந்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். இவர்கள் அனைவரும் டாக்டராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன. முதலில் இந்த மாணவர்கள் போர் அதிர்ச்சியில் இருந்து விடுபட வேண்டும்.

வலியுறுத்தல்மாணவர்கள் நலன் குறித்து அக்கறையுடன் கேள்வி கேட்கும் காங்கிரஸ், மாணவர்களை மீட்டதற்காக அரசுக்கு பாராட்டையும் தெரிவித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ராஜ்யசபாவிலும் இந்தப் பிரச்னை நேற்று எதிரொலித்தது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், மாணவர்களின் எதிர்காலம் குறித்த திட்டத்தை, மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கடன் ரத்து செய்ய கோரிக்கைலோக்சபாவில், கேள்வி நேரத்துக்கு பிந்தைய விவாதத்தின்போது, உக்ரைன் மாணவர்கள் விவகாரம் தொடர்பாக, பல கட்சி எம்.பி.,க்கள் பேசினர். இந்தியாவிலேயே இந்த மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.”எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்த மாணவர்களை கடன் சிக்கலில் தவிக்க விடக் கூடாது. இவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, காங்.,கைச் சேர்ந்த கோடிகுன்னில் சுரேஷ் வலியுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!