எரிபொருள் பிரச்சினைக்கு கிடைத்த தீர்வு……

எரிவாயு கொள்கலன்களுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் கப்பலில் இருந்து  இன்று முதல்   எரிவாயு தரையிறக்கும் பணிகள் மற்றும் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எரிவாயு கொள்கலன்களுக்கான பணம்   நேற்று செலுத்தப்பட்டுள்ள நிலையில்  இன்று முதல் எரிவாயு இறக்குதல் மற்றும் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

இதேவேளை  எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக  லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ ஆகிய நிறுவனங்கள் நேற்று அறிவித்திருந்தன.

போதுமானளவு எரிவாயு இருப்பு இல்லாமை காரணமாக குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக குறித்த லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

இதேவேளை  மூவாயிரத்து 500 மெட்ரிக் டொன்   எரிவாயுகொள்கலன் கப்பல்கள் இரண்டு   சுமார் 10 நாட்களாக இலங்கை கடல் எல்லையில் நங்கூரமிடப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!