இலங்கையில் மட்டுமல்ல அமெரிக்காவில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு:எஸ்.பி.திஸாநாயக்க

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை இலங்கை மாத்திரம் எதிர்நோக்கவில்லை எனவும் முழு உலகமும் இந்த பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கச்சாய் எண்ணெயை உற்பத்தி செய்யாத நாடாக இலங்கை, முழு உலகமே எதிர்நோக்கும் நெருக்கடிக்கு எப்படி தீர்வை காணமுடியும்?. இதற்கு முன்னரும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

எனினும் அந்த நேரத்தில் மக்கள் குழப்பமடையவில்லை. இம்முறை எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர்கள் கூட கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக மக்கள் குழப்பமடைந்தனர்.
மக்கள் குழப்பமடைந்து, அத்தியவசியமற்ற வகையில் எரிபொருளை சேமிப்பதே தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம். எனினும் கடந்த நாட்களில் காணப்பட்ட எரிபொருள் வரிசைகளை போன்று தற்போது காண முடியவில்லை.

கொழும்பில் இருந்து கண்டி வரையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசைகள் எதுவும் காணப்படவில்லை எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!