நித்யானந்தா மீது வெளிநாட்டு பெண் பாலியல் புகார்!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது. தற்போது கைலாசா எனும் தனி நாட்டில் நித்யானந்தா இருந்து வருகிறார். அங்கிருந்தபடி அவ்வப்போது வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் பிடதி போலீசாருக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ளார்.
    
அந்த வெளிநாட்டு பெண்ணின் பெயர் சாரக் லான்ட்ரி ஆகும். பிடதி போலீசாருக்கு இ-மெயில் மூலம் அவர் புகார் அனுப்பி வைத்திருந்தார். அதில் கைலாசா நாட்டில் இருக்கும் நித்யானந்தா சாமியார், அவரது சீடர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார்.

மேலும் அந்த பெண் தனது டுவிட்டர் பதிவிலும் நித்யானந்தா மீது குற்றச்சாட்டு கூறி இருந்தார். ஆனால் நித்யானந்தா மீது இ-மெயில் வெளிநாட்டு பெண் அளித்திருக்கும் புகாரின் பேரில் பிடதி போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. மாறாக இ-மெயில் மூலம் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க சாத்தியமில்லை.

யாருக்கும் பயப்படாமல் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள ஏதாவது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அந்த பெண்ணுக்கு பிடதி போலீசார் பதிலளித்திருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!