மின்னல் வேகத்தில் உயரும் டொலர்….

நாட்டின் சில வங்கிகளில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 299 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அரச மற்றும் வர்த்தக வங்கிகளில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 299 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ரூபாவின் பெறுமதி 299 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயற்படும் சில முன்னணி  வர்த்தக வங்கிகள் மற்றும் அரச வங்கிகளின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மத்திய வங்கியினால் இன்றைய தினம் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 284 ரூபாய் 82 சதமாகவும், விற்பனை விலை 294 ரூபாய் 99 சதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!