3 வாரங்களுக்கு தேவையான மருந்துகள் மாத்திரமே இருப்பில்….

கொழும்பு தேசிய வைத்தியசாலையின்  ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும்  பரிசோதனைகளை மட்டுப்படுத்துமாறு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

மருந்து தட்டுப்பாடு காரணமாக  இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  கொழும்பு  தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.

 இந்த விடயம் தொடர்பில்  வைத்தியசாலையின் அனைத்து  தரப்பு பிரதானிகளுக்கும்  கடிதமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை அரச வைத்தியசாலைகளில்  எதிர்வரும் 3 வாரங்களுக்கு தேவையான  40 வகை  மருந்துகளின் இருப்பு போதுமானதாக காணப்படுவதாக  ஔடதஉற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க   அமைச்சு தெரிவித்துள்ளது.

 குறித்த வகை மருந்துகளை விரைவில்  நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக   ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க   அமைச்சின்  செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 மேலும் தற்போது நாட்டில் அரச வைத்தியசாலைகளில் இரண்டு வகையான மருந்துகளுக்கு மாத்திரமே தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!