பதவி நீக்கப்பட்ட பின் நிம்மதியாக இருக்கிறேன்!

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதன் பின்னரே தான் நிம்மதியாக இருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
    
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அரசியல்வாதியில்லை என்பதால், பிரச்சினைகள் ஏற்படும்போது கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு அவர் இடமளிப்பதில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரைவிட தற்போதைய ஜனாதிபதி வித்தியாசமானவர். இதனை தெரிந்துகொண்டே நாட்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

எவ்வாறாயினும் பிரச்சினை ஒன்றுக்கு தீர்வை வழங்கும்போத அந்த தீர்வே பாரதூரமான பிரச்சினையாகி விடும்.

நான் என்ற வசனங்களை ஜனாதிபதி பயன்படுத்துகிறார். நான் செய்யவில்லை. பிரச்சினைகளுக்கு நான் காரணமில்லை. பிரச்சினைகளை நான் உருவாக்கவில்லை என்றே கூறுகிறார். உண்மையில் நான் என்பதற்குப் பதிலாக அவர் நாம் என்றே பயன்படுத்துவது பொறுத்தமானது எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!