திடீரென மாயமான நாமல் ராஜபக்ஷ

பண்டாரவளை நகருக்கு அருகிலுள்ள பண்டாரவளை – பதுளை வீதியில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எரிபொருள் கோரி வாகன சாரதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையான மக்கள் வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று பண்டாரவளை விளையாட்டு மைதானத்தை திறப்பதற்கு வருகைத்தரவிருந்தார்.

பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மைதானத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளவரவில்லை என தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் பண்டாரவளை வீதியின் போக்குவரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் வீதியை மறித்து எரிபொருளைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைத்து பொது மக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!