முழு முடக்கத்திற்கு தயாராகிறதா இலங்கை……?

அத்தியாவசிய சேவையினை மாத்திரம் முன்னெடுத்து நாட்டினை முடக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் மின் சக்தி அமைச்சினை நிபுணர்கள்  சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது அவசியமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மின் விநியோகத்தடைக்காரணமாக நாட்டில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான சிறிய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!