அரசுக்கெதிராக நாளை ஒன்று திரளப் போகும் பெருமளவான மக்கள்! சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்: அமைச்சரின் எச்சரிக்கை

எதிர்ப்பு நடவடிக்கையின்போது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அமைச்சர் தெரிவிக்கையில், 

3ஆம் திகதி போராட்டத்திற்காக அனைத்து மக்களும் வீதிக்கு இறங்குமாறு கூறப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவது, பேரணியில் ஈடுபடுவது, அரசாங்கத்தை விமர்சிப்பது என்பது மக்களின் உரிமையாகும். அந்த உரிமை பறிக்கப்படவில்லை. பறிக்கப்படவும் மாட்டாது.

3ஆம் திகதி வீதிக்கு இறங்குபவர்கள், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் .  ஆனால், நாட்டின் சொத்துக்கள், அரச மற்றும் தனியார் சொத்துக்கள், வர்த்தக நிலையங்கள் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சித்தால், பொலிஸார்  கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என  துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் தாம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரையில் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், மிரிஹானவில் 39 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், காணொளி காட்சிகள் மூலம், குறித்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!