டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்தது

வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 321 ரூபா 49 சதம் வரை அதிகரித்துள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளது.

மேலும், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபா 08 சதமாகவும், விற்பனை பெறுமதி 421 ரூபா 89 சதம்.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 352 ரூபா 42 சதமாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 346 ரூபா 20 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 246 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 257 ரூபா 29 சதமாகவும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 59 சதம். விற்பனை பெறுமதி 242 ரூபா 38 சதமாகவும், ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 61 சதமாகவும் பதிவாகியுள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!