பிரித்தானிய மகாராணியாரை ரகசியமாக சந்தித்த இளவரசர் ஹாரி, மேகன் தம்பதி!

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே இணைந்து வின்ட்சரில் உள்ள ராணி மற்றும் இளவரசர் சார்லஸை ரகசியமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துள்ளனர். இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே இருவர் பற்றியும் அரசக்குடும்பத்தில் நிலவிவரும் அவதூறு கூற்றுகளின் காரணமாக எழுந்த பதட்டங்களால் கடந்த மார்ச் 2020ம் ஆண்டு அரச குடும்ப நிறுவனத்தின் பணி உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து இருவரும் விலகினார்கள்.
    
அதனைத்தொடர்ந்து, பிரித்தானியாவில் தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்து தங்களது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே குடியேறினர்.

இந்த நிலையில், விண்ட்சர் கோட்டையில் உள்ள இரண்டாம் எலிசபெத் மற்றும் அரசரை சந்திப்பதற்காக சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் இன்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டனர்.
இரண்டாம் எலிசபெத் ராணியை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டியூக் மற்றும் டச்சஸ் இருவரும் இணைந்து சந்தித்து விட்டு, பாரம்பரிய மாண்டி வியாழன் விழாவையொட்டி அரச தோட்ட மைதானத்தில் பொதுமக்களுடனும் இருவரும் கலந்து கொண்டனர்.

மேலும் இன்விக்டஸ் விளையாட்டுகளுக்காக ஹாலந்து செல்லும் போது வழியில் வேல்ஸ் இளவரசர் சார்லஸையும் சந்தித்துள்ளனர்.

இந்த திடீர் சந்திப்பானது வருங்காலத்தில் பிரித்தானியாவிற்கு இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே செல்லும்போது அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய மெய்க்காப்பாளர்களை வழங்க மறுத்ததை அடுத்து பிரித்தானிய உள்துறை அலுவலகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இருக்கும் வேளையில் ஏற்பட்டுள்ளது.

அரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கிற்காக ஹாரி கடந்த ஆண்டு பிரித்தானிய வந்தபோது மேகன் கர்ப்பமாக இருந்த காரணத்திற்காக அதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!