இது ராஜபக்சர்களின் நாடு அல்ல – குடும்ப ஆட்சிக்கு இடமில்லை!

அரசாங்கத்துக்கும் அரசாங்கத்தி்ல் இருந்து சுயாதீன செயற்படுவதாக கூறி வெளியேறிய அணியினருக்கும் இடையில் இன்று நாடாளுமன்றில் வாதவிவாதம் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவை தலைவர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருக்கு இடையிலேயே இந்த வாதவிவாதம் இடம்பெற்றது.

இதன்போது கருத்துரைத்த, அனுர பிரியதர்சன யாப்பா, நாட்டின் பிரச்சினையை தீர்க்க புதிய அமைச்சரவையை அமைத்து தீர்வு காணமுடியாது

மாறாக அனைத்து கட்சிகளையும் இணைத்து இடைக்கால நிர்வாகத்தை அமைக்கவேண்டும்.
இது ராஜபக்சர்களின் நாடு அல்ல.

நாட்டை ஒரு குடும்பத்துக்காக நாட்டை விட்டுக்கொடுத்து நித்திரையில் ஆழ்ந்திருக்கமுடியாது என்றும் அனுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!