
குறித்த முன்மொழிவுகள் அடங்கிய வரைவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த வரைவு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், 20 ஆவது திருத்தச் சட்டத்தினை இரத்து செய்தல், சுயாதீன ஆணிக்குழுக்களை நிறுவுதல் மற்றும் தேசிய பாதுகாப்பு சபையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் குறித்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!