வர்த்தக அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பி.ஜயவர்தனவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
    
ஜே.எம்.பி.ஜயவர்தன வர்த்தக அமைச்சின் செயலாளராக இருப்பதுடன், பல நிறுவனங்களின் தலைவராகவும் மேலும் பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், ஜே.எம்.பி.ஜயவர்தனவை செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வர்த்தக அமைச்சின் புதிய செயலாளராக நீல் பண்டார ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!