எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயார்! மகிந்த சற்று முன் பகிரங்க அறிவிப்பு

நாட்டு மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்ய தாம் தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்றுமுன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 
அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை. நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை. அவற்றுக்கான முன்னுதாரணங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன. அவர்களுக்குத் தேவையானது அதிகாரம் மட்டுமே. ஜனாதிபதிக்கு எவ்வித தடையின்றி முடிவெடுக்க முடியும். பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்.

நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது. இப்போது என்ன செய்வது என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

உங்களுடன் ஒரு முடிவுக்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் தாய்நாடு, இரண்டாவது தாய்நாடு, மூன்றாவது தாய்நாடு. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என  குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக்கூடாது என வலியுறுத்தி இன்றைய தினம் அலரி மாளிகை பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவித்திருந்தார்.


இதனையடுத்து மக்கள் முன் உரையாற்றிய பிரதமர், மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ள தயார் எனவும், பொது மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார் எனவும் சற்றுமுன் அறிவித்துள்ளார். 

இன்றைய தினம் விசேட அறிவிப்பின் பின்னர் மகிந்த பதவி விலகுவார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!