அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளாமல் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தயார்

எந்தவொரு அமைச்சு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளாமல்   அரசாங்கத்துக்கு  ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலை தொடர்ந்து  இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஆளுந்தரப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர்  இன்று முற்பகல்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
 
இந்த நிலையில் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அமைச்சு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளாமல்   அரசாங்கத்துக்கு  ஆதரவு வழங்குவதாக பிவித்துறு ஹெல உறுமயவின்  கட்சியின் தலைவர் நாடாளுமன்ற    உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!