கனடாவில் திரும்பப்பெறப்படும் பிரபல உணவுப்பொருள்!

சால்மோனெல்லா பாதிப்பு சாத்தியம் இருப்பதால், peanut butter தயாரிப்புகள் சில கனடாவில் திரும்பப்பெறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நிறுவனமான J. M. Smucker Co. தாமாகவே முன்வந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    
குறித்த நிறுவனத்தின் 11 வகையான தயாரிப்புகள் கனடாவில் விற்கப்பட்டு வருகிறது. குறித்த தயாரிப்புகளில் 1274425 இருந்து 2140425 வரையான இலக்கங்கள் கொண்ட ஜாடிகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் குறித்த நிறுவன தயாரிப்பை பயன்படுத்திய 14 பேர்கள் பாதிக்கப்பட்டதுடன், இருவர் மருத்துவமனை சிகிச்சையை நாடியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்தே குறித்த நிறுவனம் அவர்களின் குறிப்பிட்ட தயாரிப்புகளை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் சால்மோனெல்லா பாதிப்பு என்பது 12 மாகாணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. FDA வெளியிட்டுள்ள தகவலின்படி, சால்மோனெல்லா அறிகுறிகள் என காய்ச்சல், இரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!