செயல் இழந்து போயுள்ள மக்கள் வங்கியின் 54 பில்லியன் ரூபா கடன்கள்!

மக்கள் வங்கியினால் 2021 இல் தனியார் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 54 பில்லியன் ரூபா கடன் தொகை தற்போது செயற்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற கோப் குழுவிடம் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பான முழுமையான அறிக்கையை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

இந்த அறிக்கையில், குறித்த கடன்களுக்கு அனுமதிகளை வழங்கியவர்கள் யார்? எவ்வாறு இந்த கடன்கள் மதிப்பிடப்பட்டன? போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் கோப் தலைவர் கேட்டுள்ளார்

இந்தநிலையில் எதிர்காலத்தில் கடன்கள் வழங்கப்படும் போது, ​​அவற்றை பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கவேண்டும் என்று கோப் குழுவின் தலைவர், மக்கள் வங்கியின் தலைவரிடம் கேட்டுள்ளார். 

சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல்
இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்

இதில் எந்த நிறுவனங்கள் மக்கள் வங்கியிடம் இருந்து கடன்களை பெற்று திரும்பச்செலுத்தாமல் உள்ளன என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!