எரிவாயு அடங்கிய கப்பல் நாட்டிற்கு வருகை

எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கப்பலில் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டொன் எரிவாயு காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், நாளை மறுதினம் முதல் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினமும் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 12 தசம் 5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2 தசம் 3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இன்றைய தினம் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி முதல் லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!