ஹரீன் மற்றும் மனுஷவிடம் விளக்கம் ​கோரி அனுப்பப்பட்ட கடிதம்

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்றுக் கொண்டமை தொடர்பில் ஹரீன் மற்றும் மனுஷவிடம் விளக்கம் ​கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்திருந்த நிலையில் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அராசங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.
விளக்கம் கோரி அனுப்பப்பட்ட கடிதம்


எனவே அவர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.

அதன் அடிப்படையில் இருவருக்கும் விளக்கம் ​கோரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க அவர்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!