நிஷங்க சேனாதிபதி CID இற்கு அழைப்பு

எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர்  நிஷங்க சேனாதிபதி இன்று  மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதி போராட்டங்களின் மீது கடந்த 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான அமைதியின்மை  தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 இந்த நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் ஆகியோர் எதிர்வரும் ஜூன் 2  ஆம் திகதி மனித உரிமைகள்  ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

 இதேவேளை  மே 9  அமைதியின்மை சம்பவம்  தொடர்பில் முன்னாள்  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ  உட்பட  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம்  குற்றப்புலனாய்வு பிரிவனர் வாக்குமூலம் பதிவு  செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!