மின்சார விநியோக தடை நேரம் குறைப்பு!

போக்குவரத்துக்கு டீசல்
தனியார் போக்குவரத்து பேரூந்துகளுக்கு நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக டீசல் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளதாக எரிபொருள்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று எரிபொருள் விநியோகம் தொடர்பிலான உரையின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலையில் மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்காக 557 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண விநியோகம்
அத்துடன் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் சாதாரண நிலையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தற்போது மூன்றரை மணித்தியால மின்சார விநியோகத்தடை, இன்று முதல் இரண்டரை மணித்தியாலங்களாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோக தடையி்ல் சந்தேகம்

இதேவேளை மின்சார விநியோகத் தடை தொடர்பில் திட்டமிட்ட செயற்பாடுகள் இருந்ததாக சந்தேகம் எழுப்பப்படடுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!