விசேட நீதிமன்றம் சட்டவாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது – கோத்தா

ஊழல் வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றமானது அரசியல் பழிவாங்கலை நோக்கமாக கொண்டவை மாத்திரமல்லது. அது சட்டவாட்சி கோட்பாட்டிற்கும் எதிரானதாக காணப்படுகின்றது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இதுவரை காலமும் அரசியலமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களினூடாகவே நாட்டில் சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தேசிய அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு பலவீனமடைந்ததன் காரணாகவே தற்போது சட்டங்களிலும் அரசியலமைப்பிலும் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ள்ளது.

அத்துடன் தற்போது உருவாக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றங்களினூடாக விசரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் ஒரு தனிமனிதனின் அடிப்படை உரிமை மீறல்களை மீறுவதாகவே காணப்படுகின்றது. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளை மாத்திரம் விசாரிப்பதன் காரணமாக ஏனைய நீதிமன்ற வழக்குகள் கேலிக்கூத்தாக்கப்படுகின்றன.

மேலும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை அரசியல் பழி வாங்கும் நோக்கில் பல உத்திகளை கையாண்டது ஆனால் இதுரை காலமும் எவ்வித பொய்யான குற்றச்சாட்டுக்களும் நிருபிக்கப்படவில்லை. அது தோல்வியடைந்த நிலையிலே தற்போது விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே உருவாக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றமானது அரசியல் பழிவாங்கலை நோக்கமாக கொண்டவை மாத்திரமல்லது அது சட்டவாட்சி கோட்பாட்டிற்கு எதிரானதாக காணப்படுகின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!