எரிவாயு வினியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் தகவல்

நாடளாவிய ரீதியில் இன்றும் எரிவாயு வினியோகிக்கப்பட மாட்டாதென லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கப்பலுக்கு நிதி செலுத்தப்பட்டுள்ள நிலையில், எரிவாயு தரையிறக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 3 ஆயிரத்து 900 மெட்ரிக் டொன் எரிவாயு இவ்வாறு குறித்த கப்பல் ஊடாக நாட்டுக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது கையிறுப்பில் உள்ள எரிவாயு அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து விநியோகிக்கபட உள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 4 ஆம் திகதிமுதல் லிட்ரோ நிறுவனம் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்காது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!