அமெரிக்காவில் குப்பைத்தொட்டியில் கிடந்த கர்ப்பிணியின் தலை!

அமெரிக்காவில், எட்டு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இல்லினாய்ஸில் வாழ்ந்துவந்த Liese Dodd (22)இன் தலையற்ற உடல், அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டின் அருகே இருந்த ஒரு குப்பைத்தொட்டியில் அவரது தலை கண்டெடுக்கப்பட்டது.
    
எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த Lieseக்கு அடுத்த மாதம் பிரசவம் நடக்க இருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அவருக்கு இம்மாதம் வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அப்படிப்பட்ட சூழலில்தான் Liese தலையற்ற சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிறக்கவிருந்தது அவரது முதல் குழந்தை என்பதால், அதற்காக ஆவலுடன் காத்திருந்த குடும்பத்தினர் அனைவருமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர். Lieseக்கு வளைகாப்பு நடத்த தாங்கள் திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு அரக்கன் செய்த செயலால், அவளுக்கு இறுதிச்சடங்கு செய்யும் நிலை உருவாகிவிட்டது என கதறுகிறார் Lieseஇன் தாயாகிய Heidi Noel.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக Lieseஇன் காதலரான Deundrea Holloway (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், வேண்டுமென்றே இன்னமும் பிறக்காத குழந்தை ஒன்றைக் கொன்றது முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Deundrea எதற்காக Lieseஐக் கொன்றார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!