விமல் வீரவங்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு வாசித்து காட்டப்பட்டது.

2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனது சம்பளம் மற்றும் சொத்துக்கள் மூலம் சம்பாதிக்க முடியாத அளவில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்தமை சம்பந்தமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையே வாசித்து காட்டப்பட்டது.
நான் நிரபராதி

கொழும் மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சட்ட மா அதிபர் திணைக்களம் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
எனினும் குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு தான் குற்றவாளி அல்ல நிரபராதி என விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதனையடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு

இதனை தவிர கொழும்பு ராஜகிரியபிரதேசத்தில் நடந்த வாகன விபத்து சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கும் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

விபத்தை ஏற்படுத்தி விட்டு அதனை பொலிஸாருக்கு அறிவிக்காது தப்பிச் சென்றார் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களம், சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!