“போதைப்பொருள் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மனித உரிமை அமைப்புகள் அக்கறை காட்டவில்லை”

இலங்கையில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு அக்கறை காட்டாத மனித உரிமைகள் அமைப்பு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தீர்மானித்துள்ளபோது முந்தியடித்துக் கொண்டு கண்டனங்களை வெளியிடுகின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் குற்றச் செயல்களால் இன்று நாடு பாரிய பாதிப்பினை சந்தித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் எதுவும் வழங்காத மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன இன்று அரசாங்கம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் போது அவற்றை குற்றமாக கருதுகின்றன.

போதைப் பொருள் குற்றச் செயல்களில் தொடர்புபடுவோர்களுக்கு மரண தண்டனை அழிப்பதற்கான ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்க்கத்தக்கதாகும்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் புதிய உறுப்பினர்களை கட்சிக்குள் சேர்க்கும் நடவடிக்கையும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!