அரச சொத்துக்களை கொள்ளையிடும் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள்: கடும் அதிருப்தியில் மகிந்த யாப்பா அபேவர்தன

ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் தொடர்பில் தாம் கடும் அதிருப்தியில் உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு அரச சொத்துக்களை கொள்ளையிடும் சில அரசியல்வாதிகள் கிடைக்கப் பெறும் தகவல்களினால் தாம் பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வாக்குகளினால் ஆட்சி பீடம் ஏறும் அரசாங்கங்களின் பல அரசியல்வாதிகள் மக்களினால் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.


அரசாங்க பணம் மற்றும் சொத்துகள் என்பனவற்றை அரசியல்வாதிகள் துஸ்பிரயோகம் செய்வதனால் நாடு இவ்வாறான ஓர் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!