மைத்திரியின் 10 யோசனைகள்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 10 யோசனைகளை முன்வைத்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
    
பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு தார்மிக உரிமை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுமக்களின் எதிர்ப்பினை புரிந்துக்கொள்ளாது தொடர்ந்தும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள எவரேனும் முற்படுவார்களானால் அதனால் நாடு பாரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலகுவதுடன், புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படும் வரையில், பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அத்துடன், சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதொரு சர்வகட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு, அனைத்து கட்சித் தலைவர்களையும் கொண்ட தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!