நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர்

வடக்கில் செயற்படும் ஆவா குழு தீவிரவாத அமைப்பு அல்ல என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,

“தெற்கில் வதந்திகள் பரப்பப்படுவது போன்று ஆவா குழு ஒன்றும் தீவிரவாத அமைப்பு அல்ல.

அந்தக் குழு யாரையும் கொலை செய்யவில்லை. யாருக்கும் கடுமையான காயங்களையும் ஏற்படுத்தவில்லை.

தமிழ்த் திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளின் ஆதிக்கத்தினால், சில இளைஞர்கள் ஆவா குழு என்று இயங்குகின்றனர். அவர்கள் 17, 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அண்மையில் நான் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் என்ற வகையில் வடக்கிற்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்தேன்.

அப்போது தான், ஆவா குழு ஒரு தீவிரவாத அமைப்பு அல்ல என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

தெற்கிலுள்ள மக்கள் கருதுவது போன்று அவர்கள் கொலைகளைச் செய்யவோ, தீவிரவாத தாக்குதல்களை நடத்தவோ இல்லை.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பெற்றோருடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!