அமெரிக்காவில் 100 மில்லியன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அமெரிக்காவில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வெப்பநிலை காரணமாக 100 மில்லியன் மக்களுக்கு அவசர வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 113F வரையில் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த வெப்பநிலையானது சஹாரா பாலைவன வெப்பத்தை விடவும் அதிகமாகும்.
    
இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு வெப்ப அலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த வாரத்தில் 60 மில்லியன் மக்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அபாயகரமான வெப்ப அலை அமெரிக்காவின் பெரும்பகுதியில் நீடிக்கும் என்பதால், மொத்தமாக 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, தெற்கு சமவெளிகள், கீழ் மிசிசிப்பி பள்ளத்தாக்கு, மத்திய சமவெளிகள் மற்றும் கீழ் மிசோரி பள்ளத்தாக்கு ஆகியவற்றை வெப்ப அலை பெரிதும் பாதிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், இந்த வாரம் ஐரோப்பாவில் இதற்கு இணையான வெப்ப அலை வீசும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், ஸ்பெயினின் ரயில் சேவை முடக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தும் வெப்ப அலை காரணமாக தென்கிழக்கு வயோமிங் மற்றும் மேற்கு நெப்ராஸ்காவிற்கு அருகில் தீ விபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!