ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சுக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதற்கமைய எந்தவொரு அமைச்சின் கீழ் இல்லாத  திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவப்பட்ட நிறுவனங்கள் என்பன தொடர்ந்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜூலை மாதம் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்க பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். 

அந்தவகையில் அமைச்சுகள் தொடர்பிலும் அவர் தீவிர கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!