இந்தியாவின் ஜனாதிபதியான பழங்குடியின பெண்!

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு (Droupadi Murmu) (25) பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றிபெற்றார்.

இதன் மூலம் நாட்டின் 15ஆவது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு (Droupadi Murmu) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேவேளை இந்தியாவின் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2ஆவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு (Droupadi Murmu) பெறுகிறார்.

    
இந்நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற திரவுபதி முர்முவை (Droupadi Murmu) ராம்நாத் கோவிந்த் மலர் கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார். தொடர்ந்து, நாடாளுமன்ற மைய வளாகத்தில் இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா திரவுபதி முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பதவியேற்ற பின்னர் திரவுபதி முர்மு (Droupadi Murmu) பேசுகையில்,
“இந்த புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பெரும் பலமாக இருக்கும். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் எனது வலிமை. இந்த பதவியை கவுரவிக்கும் வகையில் செயல்படுவேன்” என கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!