ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நடந்த சந்திப்பு! மகிந்த அணியினருக்கு ரணில் கொடுத்த உத்தரவாதம்

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுவதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் கணிசமான உறுப்பினர்களை நேரில் சந்தித்து இந்த உறுதிமொழியை வழங்கியதாக கூறப்படுகிறது.

தற்போதைய நாடாளுமன்றத்தின் முழு ஆயுட்காலம் முடியும் வரை பொதுஜன பெரமுனவை கலைக்கக் கூடாது என்பது தொடர்பான கலந்துரையாடல்களில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று.

தற்போதைய நாடாளுமன்றம் ஒகஸ்ட் 5, 2020 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி, தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஒகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நாடாளுமன்றத்தின் இரண்டரை வருடங்களின் பின்னர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!