அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையில்லை:எதிர்க்கட்சித் தலைவர்

“அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையில்லை. இதுதான் உண்மையான அமைப்பு ரீதியான பிரச்சினை. சிறந்த முறையில் இணைந்து பணியாற்றக்கூடிய மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் கூடிய சிறிய குழுவினரை கொண்ட அமைச்சரவை தேவைப்படும். அணி அரசியல் பேச்சுவார்த்தைகளின் பிரதிபலன்களாக இருக்க முடியாது” என சஜித் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

போதுமான வெற்றிகரமான பொருளாதர வரையறையை நடைமுறைப்படுத்தும் வரை உலக வங்கி, இலங்கைக்கு புதிய நிதி வசதிகளை வழங்க திட்டமிடாது என உலக வங்கி தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் சஜித் பிரேமதாச இந்த டுவிட்டர் பதிவை இட்டுள்ளார்.