ரணிலின் வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நஷ்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வீட்டிற்கு தீ வைத்ததன் மூலம் 14 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதியின் மகிழுந்தை எரித்ததன் மூலம் 191 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று இதனை தெரிவித்தார்.
    
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தாக்கி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மேற்கண்டவாறு அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், அன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!