எந்த வேலையும் இன்றி இலங்கையில் அரச சேவையில் இருக்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள்

அரச சேவையில் எந்த வேலையும் இல்லாத 100,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் 16 இலட்சம் பேர் உள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கினர் தொழிலாளர்கள், சாரதிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள். அரச சேவையில் குறிப்பிட்ட நிரந்தர பொறுப்பின்றி ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்கள் இருக்கின்றனர். தற்போதுள்ள அரச ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இல்லாவிட்டாலும் அரச சேவையை பேண முடியும்.

குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது. உரிய முறைக்கு புறம்பாக அரச சேவைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் ஊடாக அரச சேவையில் மிகை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!