பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புகிறார் மிச்செல் பச்சலேட்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள், ஆணையாளர் மிச்செல் பச்சலேட் தனது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைந்தும் நாடு திரும்ப உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இரண்டாவது தவணை பதவியை நிராகரித்த நிலையில் சிலிக்கு திரும்பவுள்ளார்.
 
ஒரு பெண்ணாகவும் வாழ்நாள் முழுவதும் பெண்ணியவாதியாகவும், அனைவருக்கும் பயனளிக்கும் சமூக இயக்கங்களில் முன்னணியில் இருந்த பெண் என்ற வகையில், மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு தாம் நன்றி செலுத்த விரும்புவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பெரும்பாலும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் கேட்கப்படாத குரல்களை மேசைக்குக் கொண்டு வந்தவர்கள். தாம் சிலிக்கு திரும்பிய பின்னரும் அவர்களுடன் தொடர்ந்து நிற்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் பல சந்தர்ப்பங்களில் கவலைகளை எழுப்பிய பேச்லெட், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பயணம் ஒருபோதும் முடிவடையாது என்றும், உரிமைகள் திரும்பப் பெறப்படுவதற்கு எதிராக விழிப்புடன் இருப்பது இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார்.
ஜெனீவாவிலும் உலகெங்கிலும் உள்ள செய்தியாளர்களுக்கு, அவர்கள் செய்யும் இன்றியமையாத பணிக்காக நன்றி தெரிவிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தில் எச்சரிக்கையை எழுப்பும்போது, அது சத்தமாக ஒலிப்பது முக்கியம், உலக ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது மட்டுமே இது சாத்தியமாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், மனித உரிமைகள் உடன்படிக்கை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு நடைமுறைகள் பொறிமுறை ஆகியவற்றிற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்தை பெச்லேட் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!